மத்திய அரசு ஊழியர்களின் வருமானத்திலும் விழுகிறது இடி

 
Published : Nov 24, 2016, 06:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
மத்திய அரசு ஊழியர்களின் வருமானத்திலும் விழுகிறது இடி

சுருக்கம்

வேலையை பொறுத்தே ஊதிய உயர்வு என்ற புதிய முடிவை எடுத்துள்ளதன் மூலம் மத்திய அரசின் ஊழியர்களுக்கு புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
 மத்திய அரசு ஊழியர்கள் செயல்படாமல் இருந்தால் வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தப்படும் என்று மத்தியபணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் பார்லி.யில்நேற்று அறிவித்தார்.


மத்திய அரசு ஊழியர்களுக்கான  ஏழாவது ஊதியக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, அரசு ஊழியர்களின் செயல்பாட்டுத்திறனைப் பொறுத்தே வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். செயல்படாத ஊழியர்களின் ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கவேண்டும் என்றுபரிந்துரை செய்திருந்தது.
இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி  மத்திய அரசுப் பணியாளர்கள்  அவர்களுக்கான குறியீட்டுக்கு ஏற்ப செயல்படாவிட்டால் வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் நேற்று லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது  தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!