கருத்து கணிப்பு பித்தலாட்டம் - மோடி மீது பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா தாக்கு

 
Published : Nov 24, 2016, 06:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
கருத்து கணிப்பு பித்தலாட்டம் - மோடி மீது பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா தாக்கு

சுருக்கம்

பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் தடைக்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவாக இருப்பதாக பாஜ தலைவர்கள் கூறுவது பொய். அவர்கள் எடுத்து வெளியிட்ட கருத்துக் கணிப்பும் பித்தலாட்டம் என்று பாஜனதா எம்.பி.சத்ருகன் சின்கா குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடி ஆப் மூலம் நடத்தப்பட்ட கருத்துக்  கணிப் பில் ரூபாய் தடைக்கு 93 சதவீதம்பேர் ஆதரவு தெரி வித்துள்ளதாக கருத்துக் கணிப்பின் முடிவு வெளி யிடப்பட்டுள்ளது. இதற்காக மக்களுக்கு நன்றி தெரி விப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 125 கோடி மக்கள் தொகையின் பிரச்சனையை வெறும் மோடி ஆப் மூலம் 5 லட்சம் மக்களிடம் கருத்து கேட்டு அதை வைத்து நாடுமுழுதும் ஆதரவு என மோடி பிரச்சாரம் செய்வதை பலரும் கண்டித்து உள்ளனர்.


 இதை பாஜக எம்பியே கண்டித்துள்ளது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜனதா எம்.பி.யான பிரபல நடிகர் சத்ருகன் சின்கா, இவர் அத்வானியின் தீவிர ஆதரவாளர். அதனாலேயே கட்சியில் ஓரம் கட்டப்பட்டவர். இந்த நிலையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ரூபாய் தடை, அதுபற்றி வெளியான கருத்துக் கணிப்புகளை சின்கா சாடி உள்ளார். இது பற்றி டுவிட்டரில் அவரது பதிவுகள் வருமாறு:
 நமது தாய்மார்கள், சகோதரிகள் ஆத்திர அவசரத் துக்காக சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் கறுப்புப் பணம் என்று  ஒப்பிடுவது சரியல்ல.


கறுப்புப்பணத்துக்கு மக்கள் ஆதரவாக இருப்பதாக  சாதகமான கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது பித்தலாட்டம் ஆகும்.
முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வதை முதலில் நிறுத்துங்கள். சாதகமாக கருத்துக் கணிப்புகள், கட்டுக்கதைகள் வெளியிடுவதையும் நிறுத்தி விடுங்கள்.
பிரச்னையின் ஆழத்தை உணருங்கள். ஏழைகள், பெண்கள்,நலம்விரும்பிகள், வாக்காளர்கள், நமது ஆதரவாளர்களின் கஷ்டங்கள், வலிகளை உணர்ந்து கொள்ள வேண் டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!