இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா... தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம்!!

By Narendran SFirst Published Mar 25, 2023, 7:41 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாவில் அன்மைக்காலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஆறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மூன்று மற்றும் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்டில் இருந்து தலா ஒரு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. இவ்வாறு பாதிப்பும் உயிரிழப்பும் இருந்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: பணி நியமன ஊழல் வழக்கு… சிபிஐ தலைமை அலுவலகத்தில் தேஜஸ்வி யாதவ் ஆஜர்!!

இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுக்குறித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கடிதத்தில், தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சிலதினங்களாக அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பதிப்பில் 6.3 % தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளது.

இதையும் படிங்க: கொரோனா இதிலிருந்து பரவியதா? சர்வதேச நிபுணர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

எனவே சுவாசப்பிரச்னைகளை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடிய வகையில் மக்களிடம் போதிய விழிப்புணர்வுகளை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும். தொற்று இருப்பது போல் உணர்ந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனை செய்யும் எண்ணிக்கை ஒப்பிடும் வகையில் திருப்திகரமாக இல்லை. எனவே கூடுதலாக கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

click me!