கொரோனா இதிலிருந்து பரவியதா? சர்வதேச நிபுணர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

By Narendran SFirst Published Mar 25, 2023, 5:12 PM IST
Highlights

ரக்கூன்  நாய்களிடம் இருந்து கொரோனா வைரல் பரவியிருக்கலாம் என்று சர்வதேச நிபுணர்கள்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரக்கூன்  நாய்களிடம் இருந்து கொரோனா வைரல் பரவியிருக்கலாம் என்று சர்வதேச நிபுணர்கள்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா என்னும் கொடிய வைரஸ் கண்டறிப்பட்டது. அடுத்தடுத்த சில மாதங்களிலேயே அந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதை அடுத்து கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தியது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மார்க் ஜுக்கர்பெர்க் - பிரிசில்லா சான் தம்பதிக்கு பிறந்தது மூன்றாவது மகள்... பெயர் என்ன தெரியுமா?

இந்த பொதுமுடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா பாதிப்பை தடுக்க தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதற்கு பின் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முன்னதாக இந்த கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் இருக்கு வைரஸ் தொடர்பான ஆய்வகத்தில் இருந்தே கசிந்ததாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால், சீனா இதை முற்றிலும் மறுத்தது.

இதையும் படிங்க: உலகில் திவாலாகும் வங்கிகள்; என்னவாகும் இந்திய வங்கிகளின் நிலைமை? அமெரிக்காவின் எதிர்காலம் என்ன?

இந்த நிலையில், உகான் நகரில் கொரோனா பாதிப்பு ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா பரவையிருக்கலாம் என்று சர்வதேச நிபுணர்கள்குழு தெரிவித்துள்ளது. உகான் நகரில் உள்ள கடல் உணவுபொருட்கள் சந்தையில் ரக்கூன் நாய்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டதாகவும் அந்த வகையான நாய்களிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்றும் அதற்கான மரபணு சான்றிதழ்கள் கிடைத்து இருப்பதாகவும் சர்வதேச நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!