
நாட்டில் உள்ள 50.68 லட்சம் மத்தியஅரசு ஊழியர்கள் தங்கள் சொத்துக்களை ஆண்டுதோறும் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று லோக்பால் சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், அந்த சட்டத்தில் சில புதிய வரையறைகள் சேர்க்க வேண்டியது இருப்பதால், இப்போதுள்ள நிலையில் அரசு ஊழியர்கள் சொத்துக்களை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என அரசு தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள் இறுதி செய்யப்படவுடன் மத்தியஅரசு ஊழியர்கள் தாக்கல் செய்ய அரசு உத்தரவிடும்.
மத்தியஅரசு கொண்டு வந்த லோக்பால் சட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களை ஆண்டு தோறும் மார்ச் 31ந்தேதி அல்லது ஜூலை 31-ந்தேதிக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கடந்த 2016ம் ஆண்டுக்கான காலக்கெடு டிசம்பர் 31-ந்தேதி காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து மத்தியஅரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட அறிக்கையில், “ மத்தியஅரசு ஊழியர்கள் தங்களின் சொத்துப்பட்டியலை இப்போது வௌியிடத் தேவையில்லை. சொத்துப்பட்டியலை வெளியிடும் விதிமுறைகளில் புதிய வரையறைகளை அரசு தயாரித்து வருகிறது. அந்த புதிய வரையறைகள் இறுதி செய்யப்பட்டபின், சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். அதுவரை சொத்துக்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.