இனி ரேஷனில் பொருள் வாங்க ஸ்மார்ட் கார்டு தேவையில்லை; இந்த ஒரு APP போதும்; முழு விவரம்!

By Rayar r  |  First Published Dec 20, 2024, 9:41 AM IST


ரேஷனில் பொருட்கள் வாங்க மேரா ரேஷன் 2.0 செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ரேஷன் கார்டு இல்லாமலேயே ரேஷனில் பொருட்கள் வாங்கலாம். 


மேரா ரேஷன் 2.0 செயலி 

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்க முடியும்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், இனிமேல் ரேஷனில் பொருட்கள் வாங்க ரேஷன் கார்டு காட்ட வேண்டிய தேவை இல்லை.  மேரா ரேஷன் 2.0 செயலி (APP) இருந்தால் போதும். அது என்ன மேரா ரேஷன் 2.0 செயலி? இதை எப்படி பயன்படுத்தி பொருட்கள் வாங்குவது? என்பது குறித்து இப்போது பார்ப்போம். மத்திய அரசு மேரா ரேஷன் 2.0 செயலியை கொண்டு வந்துள்ளது.

எப்படி பயன்படுத்துவது?

இந்த செயலி மூலம் ரேஷன் கார்டு இல்லாமல் கூட ரேஷன் பொருட்களை ஆன்லைனில் பெற முடியும். இந்த மேரா ரேஷன் 2.0 செயலியை செல்போனில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு செல்போன் OTP மூலம் உள்நுழைய வேண்டும். 

பின்னர் உங்களின் ரேஷன் கார்டின் டிஜிட்டல் வடிவம் அந்த செயலியில் தோன்றும். அதை காண்பித்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறைந்த விலையில் ஏராளமானோர் ரேஷன் பொருட்களை வாங்கி வரும் நிலையில், அவர்கள் பொருட்கள் வாங்கும் வசதியை எளிதாக்கும் வகையில் இந்த செயலி கொண்டு வரப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது ரேஷன் கார்டை அவசரத்தில் மறந்து வைத்து விட்டோ இனிமேல் கவலைப்பட வேண்டாம். மொபைலில் பதிவிறக்கம் செய்த இந்த மேரா ரேஷன் 2.0 செயலியை ரேஷன் கடைகளில் காண்பித்தால் நீங்கள் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ஆகவே உடனே மேரா ரேஷன் 2.0 செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யுங்கள்.
 

click me!