7th Pay Commission DA Hike : பண்டிகை காலம் நெருங்கி வரும் இந்த நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியம் பெறுகின்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அதிகரித்து ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசை ஆளும் மோடி அரசு.
இதனைத் தொடர்ந்து இந்த நவம்பர் மாதத்தில் ஓய்வு பெற்ற மற்றும் தற்பொழுது பணி செய்து வருகின்ற மத்திய அரசு ஊழியர்களுடைய ஓய்வூதியம் அதிகரிப்பதோடு, ஊழியர்களுக்கான தீபாவளி போனஸும், 3 மாத அரியர் பணமும் அவர்களுக்கு சிறப்பு பரிசாக கிடைத்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. இந்நிலையில் வரவிருக்கின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத துவக்கத்திலேயே அடுத்த அகவிலைப்படி திருத்தம் வர உள்ளது.
ஆனால் அந்த அகவிலைப்படி திருத்தமானது கடந்த ஜூலை 2023 தொடங்கி டிசம்பர் 2023 வரையிலான AICPI குறியீட்டு எண்களின் அடிப்படையில் தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. (AICPI குறியீடு மாதம் தொடரும் மாறும்) நவம்பர் மாதம் தற்பொழுது நடந்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் வரையிலான AICPI குறியீட்டு எண்கள் வந்துள்ளது.
undefined
இன்னும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத குறியீட்டு எண்கள் கிடைத்தவுடன், அவற்றை கணக்கிட்டு பார்க்கும் பொழுது, எதிர் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத துவக்கத்தில் புதிய ஆண்டிற்கான டிஏ 50 சதவீதம் அல்லது அதற்கும் மேல் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஓய்வு பெற்ற மற்றும் தற்பொழுது பணி செய்து வருகின்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு DA மற்றும் DR விகிதங்களை ஜனவரி மற்றும் ஜூலை என்று ஓர் ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தம் செய்து அமல்படுத்தி வருகிறது மத்திய அரசு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த விகிதம், அரையாண்டு தரவை பொருத்தே அமைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான புதிய விகிதங்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அடுத்த டிஏ உயர்வானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத துவக்கத்தில் இருக்கும் என்பதால் அது ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான AICPI குறியீட்டு தரவை பொறுத்து அமையும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
தற்போது உள்ள நிலவரப்படி 48.54 சதவீதமாக டிஏ இருக்கின்றது, அதேபோல செப்டம்பர் மாதம் 2023 ஆண்டு வரை கணக்கிடப்பட்ட AICPI புள்ளிகள் சுமார் 1.7 புள்ளிகள் குறைந்து, 137.5 என்கின்ற அளவில் உள்ளது. ஆகவே இந்த நிலை நீடித்தால் அக்டோபரில் டிஏ சதவிகிதம் 49% தாண்டும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் நிச்சயமாக 50 சதவீதத்தை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹம்பியில் பாரம்பரிய நடனமாடிய கர்நாடக முதல்வர் சித்தராமையா.. வைரல் வீடியோ..
அப்படிப்பட்ட நிலையில் டிஏ மீண்டும் 4 சதவீதம் உயர்வு பெறலாம் என்றும் இதை வைத்து எதிர்வரும் ஜனவரி 2024 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ 50 முதல் 51% வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இதில் இறுதி முடிவை மத்திய அரசே எடுக்கும் என்பது தான் உண்மை நிலவரம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D