பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை நாடு திரும்ப அவசர அழைப்பு..! மத்திய அரசு அடுத்த நகர்வு..!

By ezhil mozhiFirst Published Feb 15, 2019, 5:22 PM IST
Highlights

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள புல்வாமா தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் உள்ள இந்திய தூதரை நாடு திரும்புமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை நாடு திரும்ப அவசர அழைப்பு..! 

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள புல்வாமா தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் உள்ள இந்திய தூதரை நாடு திரும்புமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது
 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து இதுவரை 44 பேர் இறந்துவிட்டனர். 

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்று உள்ளனர். இதனை தொடர்ந்து நாட்டிலோ நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை நாடு திரும்ப அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது. அதே வேளையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து, கண்டனம் பதிவு செய்யப்பட்டு உள்ளது 

click me!