வலியையும் வேதனையையும் மனதில் கொண்டு வீரர்களின் உடல்களை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்..!

By vinoth kumarFirst Published Feb 15, 2019, 4:11 PM IST
Highlights

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடலுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்காமில் வீரர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் வீரர்கள் உடல் வைத்திருந்த பெட்டியை ராஜ்நாத் சிங் தோளில் சுமந்து கொண்டு சென்று வண்டியில் ஏற்றினார்.

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடலுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்காமில் வீரர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் வீரர்கள் உடல் வைத்திருந்த பெட்டியை ராஜ்நாத் சிங் தோளில் சுமந்து கொண்டு சென்று வண்டியில் ஏற்றினார். இதனையடுத்து தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

 

நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களால் வீரமரணம் அடைந்தனர். 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடல்கள் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சிலரின் அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்த வீரர்களின் உடல்களை அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்று மாலைக்குள் அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இவருடன் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் உடன் சென்றனர். இதனையடுத்து கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீரர்கள் உடல் வைத்திருந்த பெட்டியை ராஜ்நாத் சிங் தோளில் சுமந்து கொண்டு சென்று வண்டியில் ஏற்றினார். இதனையடுத்து தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

click me!