மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்..? பாகிஸ்தானுக்கான இந்திய தூதருக்கு அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Feb 15, 2019, 4:51 PM IST
Highlights

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா உடனடியாக டெல்லி திரும்புமாறு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா உடனடியாக டெல்லி திரும்புமாறு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

காஷ்மீர் புல்வாமா பகுதியில், நேற்று மாலை 78 வாகனங்களில் 2,500க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் வாகனத்தை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் வரு மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த தாக்குாலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் நடத்திய இந்த தீவிரவாதி தாக்குதலுக்கு பல்வேறு நாட்டு தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டிய நிலையில் அதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது. 

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூடியது. அதில் பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கப்பட்ட வணிக அந்தஸ்து ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. பின்னர் விழா உன்றில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி ராணுவத்திற்கு பதிலடி தர முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பிரதமர் கூறுவதை பார்க்கும் போது ஏற்கனவே, உரி தாக்குதல் சம்பத்தை போன்று மீண்டு நம் ராணுவம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா உடனடியாக டெல்லி திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தை திரும்ப பெற முடிவில் மத்திய அரசு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!