
தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டண விபரங்களை ஒப்படைக்க வேண்டும் என சிபிஎஸ்இ அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக ஜுன் 1, 2ஆம் தேதிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் வெயில் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க ஆன்லைனில் விண்ணப்பம் முறை கடைபிடிக்கப்படும் எனவும் கூடுதல் கட்டணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டண விபரங்களை ஒப்படைக்க வேண்டும் என சிபிஎஸ்இ அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.