கொரோனாவால் அனாதையான பள்ளி மாணவர்களுக்கு…! சிபிஎஸ்இ அறிவித்த சலுகை

By manimegalai aFirst Published Sep 22, 2021, 6:36 AM IST
Highlights

கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி: கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா இன்று பல லட்சக்கணக்கானோர் வாழ்க்கை பாதையை திசை திருப்பி விட்டுள்ளது. மேலே இருந்தவர்கள் கீழே, கீழே இருந்தவர்கள் இன்னும் கீழே என்கிற ரேஞ்சுக்கு அனைவரையும் போட்டு தாக்கிவிட்டது இந்த கொரோனா.

தற்போது மெல்ல, மெல்ல அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையும் இயல்பை நோக்கி நகர்ந்தாலும் பொருளாதாரம் மற்றும் உறவுகளின் இழப்புகளை ஈடுகட்ட முடியாது என்பது நிச்சயம். தற்போது நிலைமைகள் மெல்ல, மெல்ல மாநி நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.

 இந் நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கட்டுவதில் இருந்து சிபிஎஸ்சி விலக்கு அளித்துள்ளது.

அதாவது கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தத்து பெற்றோரை கொண்ட மாணவர்கள், சட்டப்பூர்வமா பாதுகாவலரை (guardian) கொண்ட மாணவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் பட்டியலை தரும் போது பெற்றோரை இழந்த மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ உத்தரவிட்டு உள்ளது.

click me!