செல்லப்பிராணி மேல் இம்புட்டு லவ்வா..? ஒரு விமானத்தையே புக் செய்த எஜமானர்…

Published : Sep 21, 2021, 07:26 PM IST
செல்லப்பிராணி மேல் இம்புட்டு லவ்வா..? ஒரு விமானத்தையே புக் செய்த எஜமானர்…

சுருக்கம்

தனது செல்லப்பிராணி பயணிப்பதற்காக ஒரு விமானத்தின் அனைத்து இருக்கைகளையும் புக் செய்திருக்கிறார் எஜமானர் ஒருவர்.

மும்பை: தனது செல்லப்பிராணி பயணிப்பதற்காக ஒரு விமானத்தின் அனைத்து இருக்கைகளையும் புக் செய்திருக்கிறார் எஜமானர் ஒருவர்.

வீடுகளில் செல்லப்பிராணிகளை விரும்பும் நபர் பலர் உண்டு. அவரவர் வசதிக்கு ஏற்பவும், விருப்பங்களுக்கு ஏற்பவும் செல்லப்பிராணிகளை வளர்ப்பர். அப்படிப்பட்ட செல்லப்பிராணிகள் மீது வளர்ப்பவர்களுக்கு கொள்ளை பிரியம்.

பல இடங்களில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நாயை உடன் அழைத்து செல்வது வழக்கம். அதற்காக ஸ்பெஷல் கவனிப்புகளும் அதை வளர்ப்போர் செய்வது உண்டு.

ஆனால் மும்பையில் தமது செல்லப்பிராணி நாய் பயணம் செய்ய ஒரு விமானத்தையே புக் செய்து வார்ரே வா… என்று சொல்ல வைத்திருக்கிறார் எஜமானர் ஒருவர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சென்னைக்கு பேலா என்று பெயர் கொண்ட தமது செல்ல நாயை அழைத்து வர விரும்பி உள்ளார். அதற்கானக ஏர் இந்தியா விமானத்தின் முழு பிசினஸ் வகுப்பு இருக்கைகள் (அதாவது 12) புக் செய்துள்ளார். இதற்கான டிக்கெட் செலவு மட்டும் 2.5 லட்சம் ரூபாய்.

ரிசர்வேஷன் முடிந்தவுடன் ஏர் இந்தியாவின் ஏஐ 671 விமானத்தில் ஜம்மென்று அந்த நாய் சென்னைக்கு பறந்து வந்திருக்கிறது. மற்ற விமானங்களை விட ஏர் இந்தியா விமானத்தை எஜமானர் தேர்வு செய்ததற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

உள்நாட்டு விமான பயணங்களில் பயணியுடன்  தமது செல்ல பிராணிகளையும் அனுமதிக்கும் ஒரே நிறுவனம் ஏர் இந்தியா மட்டுமே. ஏர் இந்தியாவில் செல்லப்பிராணிகள் பயணம் வழக்கமானது தான் என்றாலும், முதல் முறையாக ஒரு நாய்க்காக அனைத்து இருக்கைகளும் புக் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். ரொம்ப அதிர்டஷ்க்கார நாய் தான் போங்கள்….!

PREV
click me!

Recommended Stories

மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை