ரூ. 19 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு… அப்படி என்ன ஸ்பெஷல்….?

Published : Sep 20, 2021, 08:45 PM IST
ரூ. 19 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு… அப்படி என்ன ஸ்பெஷல்….?

சுருக்கம்

தெலுங்கானாவில் ஒரு லட்டு 19 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் ஆச்சரியத்தை தந்திருக்கிறது.

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஒரு லட்டு 19 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் ஆச்சரியத்தை தந்திருக்கிறது.

ஐதாராபாத்தை அடுத்து உள்ள பாலாபூர். இந்த ஊரில் பிரபலமான விநாயகர் கோயில் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளில் சாமிக்கு லட்டு படைக்கப்படும்.

பின்னர் அந்த லட்டு ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த லட்டுக்கு பக்தர்கள் இடையே ஏக மவுசு. கொரோனா தொற்றினால் கடந்த ஆண்டு லட்டு ஏலம் விடப்படவில்லை.

ஆனால் இந்த ஆண்டு லட்டு ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் போது தொடக்க விலை 1,116 என நிர்ணயம் செய்யப்பட்டது. அவ்வளவு தான்… வந்திருந்த பலரும் ஏலம் கேட்க கடைசியில் 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.

இந்த லட்டை ஏலத்தில் எடுத்தது ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்சி ரமேஷ் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர் மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் தான். கடந்த ஆண்டு 27 லட்சத்துக்கு இந்த லட்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!