சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 3-ம் இடம் பிடித்த சென்னை மண்டலம்.. முதலிடத்தில் எந்த மண்டலம்?

Published : May 12, 2023, 01:42 PM ISTUpdated : May 12, 2023, 02:59 PM IST
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 3-ம் இடம் பிடித்த சென்னை மண்டலம்.. முதலிடத்தில் எந்த மண்டலம்?

சுருக்கம்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்றது. 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.12 சதவீதம். கடந்த ஆண்டு 94.40% மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 

வழக்கம் போல சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வெழுதிய மொத்த மாணவிகளில் 94.25% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் 92.27% மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வில் தேர்வில் பெற்றுள்ளனர். எனினும் 12-ம் வகுப்பை போலவே, 10-ம் வகுப்பு தேர்விலும், யார் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் என்பதை சிபிஎஸ் இ அறிவிக்கவில்லை. மாணவர்களிடையே தேவையற்ற போட்டியை தவிர்க்க யார் முதலிடம் என்ற விவரம் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த தேர்வில் 99.91% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. 76.90% தேர்ச்சியுடன் கௌஹாத்தி மண்டலம் கடைசி இடத்தில் உள்ளது. 

மண்டல வாரிய தேர்ச்சி சதவீதம் 

திருவனந்தபுரம் : 99.91%

பெங்களூரு : 99.18%

சென்னை : 99.14%

அஜ்மீர் : 97.27%

புனே : 96.92%

பாட்னா : 94.57%

சண்டிகர் : 93.84%

புவனேஸ்வர் : 93.64%

பிராயக்ராஜ் : 93.55%

நொய்டா : 92.50%

பஞ்ச்குலா : 92.33%

போபால் : 91.24%

டெல்லி மேற்கு : 90.67%

டேராடூன் : 90.61%

டெல்லி கிழக்கு : 88.30%

கௌஹாத்தி : 76.90%

எந்தெந்த இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்?

cbse.gov.in

results.nic.in

results.digilocker.gov.in

umang.gov.in

இதையும் படிங்க : Breaking : சிபிஎஸ்இ +2 முடிவுகள்.. முதலிடம் பிடித்த திருவனந்தபுரம் மண்டலம்.. சென்னைக்கு எந்த இடம்?

டிஜிலாக்கர் மூலம் எப்படி தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது?

www.digilocker.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்

cbse board results என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

தேவையான தகவலை உள்ளிடவும்

தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும். பின்னர் அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான நேரடி இணைப்பு இதோ

இதையும் படிங்க : ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி உள்ளிட்ட 68 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தி வைப்பு..

PREV
click me!

Recommended Stories

Indigo : பயணிகளுக்கு ரூ 10,000 மதிப்புள்ள வவுச்சர்கள்..! அவமானத்தை ஈடுகட்டும் இண்டிகோ நிறுவனம்..!
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!