ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவாலா? நிறுவன தலைவர் கூறுவது என்ன?

By Narendran S  |  First Published May 11, 2023, 11:52 PM IST

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவால் நடைமுறையை மேற்கொள்ள உள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவால் நடைமுறையை மேற்கொள்ள உள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் கடந்த 1 ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்திற்கு கடன் வழங்கும் நிறுவனமான ஏர்காஸ்டில், ஸ்பைஸ்ஜெட்டுக்கு எதிராக திவால் செயல்முறையைத் தொடங்க ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதையும் படிங்க: சாதி வெறி மோதலில் உயிர்கள் அழிந்தன; வீடுகள் எரிக்கப்பட்டன... மணிப்பூர் கலவரத்தின் 7 நாட்கள்--பகுதி 2!!

Tap to resize

Latest Videos

ஆனால் இந்த தகவலுக்கு ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் கூறுகையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவால் நடைமுறையை மேற்கொள்ள உள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. இது தொடர்பான வெளியாகும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

இதையும் படிங்க: நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி... ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நாட்டுக்கு அர்ப்பணிப்பு!!

நாங்கள் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தை இயக்குவோம். மேலும், சில விமானங்களை புதுப்பிக்க 50 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

click me!