முடிஞ்சா கைது செய்யுங்க பார்க்கலாம்.. பாஜகவுக்கு சவால் விடும் மணீஷ் சிசோடியா - டெல்லியில் திருப்பம்

By Raghupati R  |  First Published Aug 20, 2022, 5:05 PM IST

மணீஷ் சிசோடியா ஊழல் செய்துள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாஜக கூறி வந்தது. இந்தச் சூழலில் தான் நேற்று மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர்.


டெல்லியில் சில மாதங்களுக்கு முன்பு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. டெல்லி மொத்தம் 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.இதில் மிகப் பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் கிளம்பின. இதில் பல விதிமீறல்கள் அரங்கேறி உள்ளதாக பாஜக குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தது.

இதையடுத்து இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யத் தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டார். தலைமைச் செயலாளர் அளித்த அறிக்கையில் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு இருந்த நிலையில், இதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்குத் துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?

கலால் துறையில் 11 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே டெல்லி அரசின் புதிய மது கொள்ளைக்கு ஆளுநர் அனுமதி தராததால், இதை வாபஸ் பெறுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா ஊழல் செய்துள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாஜக கூறி வந்தது. இந்தச் சூழலில் தான் நேற்று மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர். 

இதில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக சிபிஐ கூறுகின்றனர். இதற்கிடையே சர்வதேச பத்திரிக்கையான நியூ யார்க் டைம்ஸ் மணீஷ் சிஷோடியாவை பாராட்டி முதல் பக்க கட்டுரை வெளியிட்டதைப் பொறுத்துக் கொள்ளாமலேயே மத்திய அரசு இந்த ரெய்டை அரங்கேற்றி உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வால் குற்றஞ்சாட்டி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..“அரசு டெண்டரில் முறைகேடு.. எடப்பாடிக்கு எதிரான ஆதாரங்கள் இருக்கு !” அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தகவல்

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மணீஷ் சிசோடியா, ‘அடுத்த 3, 4 நாட்களில் அமலாக்கத்துறை என்னை கைது செய்யலாம். அதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. கல்வித்துறையில் டெல்லி அரசின் சாதனைகள் உலகம் முழுவதும் பேசப்படுவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டிற்கு நேற்று வந்தனர். துணை முதல்வர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அதிகாரிகள் நல்ல முறையில்  நடந்துகொண்டார்கள். 

உயரதிகாரிகளின் உத்தரவுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. ஆனால் மிகவும் நேர்த்தியாக நடந்து கொண்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மதுவிலக்கு விவகாரத்தில் பிரச்சனையில்லை; அரவிந்த் கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்தவே எனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டினார். பாஜகவை கண்டு ஆம் ஆத்மி பயப்படாது. பாஜகவால் எங்களை உடைக்கவும் முடியாது. 2024 தேர்தல் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் தான் என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

click me!