கணவனை இழந்து தனிமையில் வாடிய தாய்... மாப்பிள்ளை பார்த்து 2வது திருமணம் செய்து வைத்த மகள்.

Published : Aug 20, 2022, 02:02 PM ISTUpdated : Aug 20, 2022, 02:13 PM IST
கணவனை இழந்து தனிமையில் வாடிய தாய்... மாப்பிள்ளை பார்த்து  2வது திருமணம் செய்து வைத்த மகள்.

சுருக்கம்

கணவனை இழந்து தனிமையில் வாடிய தாய்க்கு அவரது மகள் வரன் பார்த்து 2வது திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.  

கணவனை இழந்து தனிமையில் வாடிய தாய்க்கு அவரது மகள் வரன் பார்த்து 2வது திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரை  சேர்ந்தவர் ரதி மேனன் (59) இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களையும் நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார் ரதிமேனன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரதி மேனனில் கணவர் இறந்துவிட்டார். இதானல் ரதிமீனா தனிமையில் இருந்து வந்தார். மகள்கள் இருவரும் கணவன் வீட்டில் இருந்து வந்ததால், தாய் ரதிமீனா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இது அவரது மூத்த மகளுக்கு நெருடலை ஏற்படுத்தியது. தாங்கள் திருமணம் செய்து கொண்டு கணவருடன் உள்ள நிலையில் தாய் மட்டும் தனிமையில் இருக்கிறாரே என ரதி மேனனின் மூத்த மகள் பிரசிதா வருந்தினார், தனது தாய்க்கு ஒரு துணையை ஏற்படுத்தி தர வேண்டும் என அவர்  முடிவு செய்தார், தனது எண்ணத்தை தாயிடம் கூறினார், அதற்கு அவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இதையடுத்து தனது தாய்க்கு இரண்டாவது திருமணத்திற்காக வரன் தேடத் தொடங்கினார், அப்போது அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்த திவாகரன் என்பவரை ரட்சிதா அணுகினார்.

இதையும் படியுங்கள்: ஆண்கள் பணம் கொடுத்தால் பெண்களும் என்ஜாய் பண்றாங்க... என்னை அர்ஜஸ்மென்ட்க்கு கூப்பிடல: ரேகா நாயர்

தனது எண்ணத்தை அவரிடம் கூறினார், திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஆவார்,  அவரிடம் தனது தாயின் நிலைமை குறித்தும் அவருக்கு நிச்சயம் ஒரு துணை வேண்டும் என்று தான் விரும்புவதையும், அவருடன் நீங்கள் இருந்தால் மிகவும் நல்லது என்றும் திவாகரனிடம் உருக்கமாக வேண்டினார். தாயின் பாதுகாப்புக்காக ஒரு மகன் உருகுவதை கண்ட திவாகரன், இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்தார். இதனையடுத்து அவரின் இரண்டு மகளிடமும் பிரசிதா எடுத்துக் கூறினார் அவர்களும் திருமணத்திற்கு எதிர்ப்பு கூறவில்லை, இந்நிலையில் ரதி மேனன்-திவாகரன் திருமணத்தை உற்றார் உறவினர்கள் முன்னிலையில் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் நடத்த திட்டமிட்டார்.

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ்.. எங்களை டார்ச்சர் பண்ணது போதாதா.? எங்களுக்கு எடப்பாடியார் போதும்.. கழுவி ஊற்றும் ஆர்பி உதயகுமார்.

அதன்படியே உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தனது தாயின் தனிமையைப் போக்க மகள் அவருக்கு வரன்தேடி இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ள இந்த சம்பவத்தை பலரும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசிதா, எனது அம்மாவுக்கு நாங்கள் இரண்டு மகள்கள் இப்போது எங்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது, நாங்கள் கணவரின் வீட்டில் வாழ்ந்து வருகிறோம், ஆனால் அப்பா திடீர்னு மரணமடைந்ததால் அம்மா தனிமையாகிவிட்டார், எங்களுக்கும் குழந்தை குடும்பம் என்று இருப்பதால் அவரை அடிக்கடி வந்து பார்க்க முடியவில்லை, அம்மாவின் தனிமையை போக்க யோசித்து இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தேன் என அவர் கூறியுள்ளார்.  

 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!