கேளராவில் அதானி நிறுவன துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு.. மீனவர்கள் தடுப்புகளை உடைத்து எறிந்ததால் பரபரப்பு.!

By vinoth kumarFirst Published Aug 20, 2022, 11:52 AM IST
Highlights

கேரளாவில் அதானி நிறுவனத்தின் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தடுப்புகளை உடைத்து எறிந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கேரளாவில் அதானி நிறுவனத்தின் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தடுப்புகளை உடைத்து எறிந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்கடல், பல்நோக்கு, சர்வதேச துறைமுகத்தை குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமம் அமைத்து வருகிறது. விழிஞ்சம் துறைமுகம் திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், கடற்கரை பகுதிகள் அலைகளால் அரிக்கப்படும் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீனவர்கள் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க;- adani: gautam adani: தொழிலதிபர் கெளவுதம் அதானிக்கு விஐபி 'Z' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்

இந்தப் போராட்டத்தில், லத்தீன் திருச்சபையைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர். கட்டுமானம் நடந்து வரும் பகுதியில் காவல் தறையினர் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து போராட்டக்காரர்கள் முன்னேறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 7 அம்சங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்கார்கள் அறிவித்துள்ளனர். 

பின்னர் சமூகத் தலைவர்களின் சமாதானத்தை ஏற்று போராட்டக்காரர்கள் வெளியேறினர். இந்நிலையில், 6 அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- adani group: adani ports: அதானி குழுமம், ரூ.835 கோடிக்கு நவ்கரின் கன்டெய்னர் டெப்போவை விலைக்கு வாங்குகிறது

click me!