திருப்பதி கோயிலுக்கு சென்று காரில் திரும்பியபோது பயங்கரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி..!

Published : May 15, 2023, 11:32 AM ISTUpdated : May 15, 2023, 11:36 AM IST
திருப்பதி கோயிலுக்கு சென்று காரில் திரும்பியபோது பயங்கரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி..!

சுருக்கம்

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தை சேர்ந்த 12 பேர் நேற்று முன்தினம் வரிசையில் காத்திருந்து திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் இன்று அதிகாலை ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

ஆந்திராவில் கார் - லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  திருப்பதி கோயிலுக்கு சென்று 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தை சேர்ந்த 12 பேர் நேற்று முன்தினம் வரிசையில் காத்திருந்து திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் இன்று அதிகாலை ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

இதையும் படிங்க;- மகனின் உடலை 200 கி.மீ பையில் வைத்து எடுத்து சென்ற நபர்.. ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாததால் நடந்த அவலம்

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 6 படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி மலைக்கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விபத்தில் உயிரிழந்த அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  மணிப்பூரில் வன்முறையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு; டெல்லிக்கு விரைந்த முதல்வர் பைரன் சிங்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!