3.6 டி.எம்.சி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக அரசு தரப்பு, நீர் இருப்பு மற்றும் சூழ்நிலையை கருத்தில்கொண்டுதான் தண்ணீர் திறக்க முடியும் என்று கூறியது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 3.6 டி.எம்.சி நீர் திறக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கோரியிருந்த நிலையில் அதனை கர்நாடக தரப்பு நிராகரித்துள்ளது.
தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான காவிரி நீர் பிரச்னை தொடர்பாக ஆலோசித்து முடிவுகள் எடுக்க இருதரப்பு அதிகாரிகள் அடங்கிய காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த மார்ச் 21ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தபோது, கர்நாடாக அரசு பெங்களூருவில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தினர்.
பூமிக்கு அடியில் 700 கி.மீ. ஆழத்தில் ஒரு ரகசியப் பெருங்கடல்! அதிசயிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
கர்நாடகாவின் இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தது. கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மாதம் 2.8 டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியது.
இச்சூழலில், வியாழக்கிழமை டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் நடைபெற்ற்து. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது தமிழக அரசு தரப்பில், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தமிழ்நாட்டுக்கு 5 டி.எம்.சி நீருக்குப் பதிலாக 1.5 டி.எம்.சி நீர் மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 3.6 டி.எம்.சி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கர்நாடக அரசு தரப்பு, தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்க மறுத்து, நீர் இருப்பு மற்றும் சூழ்நிலையை கருத்தில்கொண்டுதான் தண்ணீர் திறக்க முடியும் என்று கூறியது. கர்நாடகாவில் போதிய மழை இல்லாமலும், அதீத கோடை வெப்பம் காரணமாகவும் வறட்சி ஏற்பட்டுள்ள சூழலில் உடனடியாக காவிரியில் நீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக அரசு தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
H5N1 பறவைக் காய்ச்சல் கொரோனாவை விட அபாயமான பெருந்தொற்று; வெள்ளை மாளிகை அலர்ட்!