இரயில் கட்டணம் உயர்கிறதா..? மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து..? மத்திய அமைச்சர் சொன்ன பதில்...

By Thanalakshmi VFirst Published May 20, 2022, 9:39 AM IST
Highlights

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூத்த குடிமக்களுக்கா கட்டண சலுகை இனி தொடர வாய்ப்பில்லை என்றும் இரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,” கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை இனி தொடர வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். 

மேலும் படிக்க: வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை... மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சூப்பர் அறிவிப்பு!!

மேலும் பேசிய அவர், காந்த விசையை பயன்படுத்தி ரயில்களை இயக்கும் ஹைப்பர் லூப் திட்டத்திற்காக மத்திய அரசு சார்பில் ரூ. 8.5 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே இரயில் மோதி யானைகள் விபத்துக்குள்ளாவதை தடுக்கும் வகையில், யானைகள் கடக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் இருக்கும் தண்டவாளங்கள் உயர்த்தப்படுவதோடு மட்டுமல்லாமல், யானைகள் செல்வதற்கு ஏற்ப சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என்று கூறினார்.

ரயில் கட்டணம் உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பல ஆண்டுகளாக ரயில் கட்டணம் ஒரே நிலையில் உயர்த்தப்படாமல் இருந்து வருவதாகவும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்றும் உறுதியளித்தார். மேலும் மெட்ரோ ரயில்கள் போல, விரைவில் புறநகர் ரயில்களிலும் குளிர்சாதன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

தமிழ்நாட்டில்‌ 5 ரயில்‌ நிலையங்கள்‌ முழுமையாக சீரமைப்பட்ட உள்ளதாகவும்‌, இதற்காக ரூ.3861 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்‌. கொரோனா தொற்று காலத்தில்‌ நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில்‌ மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை
தொடர வாய்ப்பில்லை என்று ரயில்வே அமைச்சர்‌ அஸ்வினி வைஷ்ணவ்‌ கூறினார்‌. சில நாள்களுக்கு முன்பு மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை நிறுத்தப்பட்டதால்‌ ரூ.1,500 கோடி கூடுதல்‌ வருவாய்‌ கிடைத்துள்ளது என சமீபத்தில்‌ ரயில்வே நிர்வாகம்‌ கூறியிருந்தது.

மேலும் படிக்க: ஊழல் வழக்கு.. லாலு பிரசாத் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..!

click me!