மனைவியை பேய், பிசாசுன்னு சொன்னா தப்பு இல்லையாம்! பாட்னா உயர் நீதிமன்றம் கொடுத்த விளக்கம்!

By SG Balan  |  First Published Mar 30, 2024, 9:01 PM IST

தோல்வியில் முடிந்த திருமண உறவில் மனைவியை பேய், பிசாசு என்று திட்டுவது சகஜம் என்றும் அது கொடூரமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.


பாட்னா உயர் நீதிமன்றம், அதன் சமீபத்திய தீர்ப்பில், மனைவியை "பேய்", "பிசாசு" என்று அழைப்பது கொடுமையாகாது என்று கூறியுள்ளது.

ஜார்க்கண்டின் மாநிலம் பொகாரோ பகுதியை சேர்ந்த சாஹ்தியோ குப்தாவின் மகன் நரேஷ் குமார் குப்தா. கடந்த 1993ஆம் ஆண்டு நரேஷ் குப்தாவுக்கும் ஜோதி என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஓராண்டிலேயே இவர்களின் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது.

Tap to resize

Latest Videos

ஜோதியின் தந்தை கன்னையா லால், நரேஷ் குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். கார் வாங்கி தர வேண்டும் என்று கூறி மகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று தனது மனுவில் அவர் கூறியுள்ளார்.

மோடியால் தூக்கத்தை தொலைத்தவர்கள் யார் யார் தெரியுமா? பட்டியல் போட்டு விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மேலும், நரேஷ் தன் மனைவியை பேய், பிசாசு என்று வசைபாடி கொடூரமாக நடந்துகொள்வதாகவும் புகார் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு  நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜோதியை மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்தி இருக்கின்றனர் என்று தனது மனுவில் விவரித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றமும் அமர்வு நீதிமன்றமும் நரேஷ் குடும்பத்தினர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதை உறுதி செய்து தீர்ப்பு வழங்கின. அந்தத் தீர்ப்புக்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் நரேஷ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி பிபேக் சவுத்ரி, நரேஷ் மனைவியை கொடுமைப்படுத்தினார் என்று நிரூபிக்க சான்றுகள் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். ஜோதி கொடுமைப்படுத்தப்பட்டார் என்ற உண்மையை நிரூபிக்க மருத்துவ ரீதியான சான்று எதுவும் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், மனைவியை பேய், பிசாசு என்று திட்டியதாகக் கூறியதையும் நீதிபதி கருத்தில் கொள்ள மறுத்துவிட்டார். அதனை விளக்கிய நீதிபதி, தோல்வியில் முடிந்த திருமண உறவில் கணவன் - மனைவி இடையே இப்படித் திட்டிக்கொள்வது சகஜம் என்றும் அது கொடூரமானதும் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்யும் ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது.

இந்த நம்பர்களில் இருந்து போன் கால் வந்தா அலர்ட்டா இருங்க... எச்சரிக்கும் மத்திய அரசு!

click me!