அமலுக்கு வந்த CAA : இந்திய குடியுரிமைக்கு இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்..

By Ramya sFirst Published Mar 12, 2024, 12:24 PM IST
Highlights

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் சேர்ந்த நபர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இணைய போர்ட்டலை உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31-க்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த முஸ்லீம் அல்லாத மதப்பிரிவினர் சட்ட விரோத குடியேறிகளாக கருதப்படமாட்டார்கள். 

இந்த நிலையில் இதற்கான இணைய தளத்தை (எம்ஹெச்ஏ) மத்திய உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) தொடங்கியுள்ளது. இதில் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நிர்வகிக்கும் விதிகளை அமல்படுத்துவது குறித்து நரேந்திர மோடி அரசாங்கம் மார்ச் 11,  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2019 இல் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட, குடியுரிமை சட்ட திருத்தம், வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் தப்பி இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட முஸ்லீம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது..

மத்திய உள்துறை அமைச்சகம் X  பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ உள்துறை அமைச்சகம் (MHA) இன்று குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019 (CAA-2019) இன் கீழ் விதிகளை அறிவித்தது. இந்த விதிகள் , குடியுரிமை (திருத்தம்) விதிகள், 2024 என அழைக்கப்படுகிறது, CAA-2019 இன் கீழ் தகுதியான நபர்கள் இந்திய குடியுரிமை வழங்குவதற்கு விண்ணப்பிக்க முடியும்." என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்ப செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் புதிதாக நிறுவப்பட்ட போர்டல் மூலம் நடத்தப்படும் என்றும், அங்கு விண்ணப்பதாரர்கள் பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த ஆண்டை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா; அமைச்சரவையும் கலைப்பு - என்ன காரணம்?

எனினும் இந்த சட்டம் கடுமையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. மேலும் இந்த சட்டம் மத பாகுப்பாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!