தெலங்கனா ரேஷன் கடையில் பிரதமர் மோடி படத்தை ஏன் வைக்கவில்லை எனக் கேட்டு மாவட்ட ஆட்சியை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிந்து கொண்டார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்பிஜி சிலிண்டரில் மோடியின்புகைப்படத்தையும் விலையையும் ஒட்டி டிஆர்எஸ் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
தெலங்கனா ரேஷன் கடையில் பிரதமர் மோடி படத்தை ஏன் வைக்கவில்லை எனக் கேட்டு மாவட்ட ஆட்சியை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிந்து கொண்டார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்பிஜி சிலிண்டரில் மோடியின்புகைப்படத்தையும் விலையையும் ஒட்டி டிஆர்எஸ் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
தெலங்கானா மாவட்டம் கம்மாரெட்டி மாவட்டத்தில் உள்ள பீர்கூர் நகரில் உள்ள ஒரு நியாயவிலைக்கடையில் நேற்று திடீரென மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு நடத்தினார்.
ncrb: 2021ம் ஆண்டில் பிடிபட்ட கள்ளநோட்டுகளில் 60% ரூ.2ஆயிரம் நோட்டுகள்: என்சிஆர்பி தகவல்
அப்போதுஅந்த ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்படவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டிலை நேரில் அழைத்த நிர்மலா சீதாராமன் மோடியின் படம் வைக்கப்படாதது ஏன் என்று கண்டித்தார்.
ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியராக நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அது சேதப்படாமல், கிழிக்கப்படாமல், அகற்றப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்டித்தார்.
மேலும் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் செயலுக்கு , பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
நேற்று தெலுங்கானா மாநிலத்தில் ரேசன் கடையில் ஆய்வுக்குச் சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் படம் ஏன் இல்லை என கலெக்டரிடம் கேட்ட நிலையில்
எரிவாயு சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி பிரச்சாரம் செய்யும் TRS கட்சியினர்
video : pic.twitter.com/tkIa0Fo1HT
இந்நிலையில் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்பிஜி சமையல் சிலிண்டர் மீது சிலிண்டர் விலையையும், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும் ஒட்டி டிஆர்எஸ்கட்சியினர் பதிலடி கொடுத்து, கிண்டல் செய்துள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்தது. தற்போது, ஒரு சிலிண்டர் விலை ரூ.1,105 ஆக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய இரு மடங்கிற்கும் மேலாக விலை உயர்ந்துவிட்டது.
starbucks: ceo: ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்
கடைசியாக சமையல் சிலிண்டர் விலைகடந்த ஜூன் மாதம் 50ரூபாய் உயர்த்தப்பட்டது அதன்பின் விலை மாற்றம் ஏதும் இல்லாமல் நீடிக்கிறது. பாஜக ஆட்சியில் சமையல் சிலிண்டர்விலை கடுமையாக உயர்ந்துவிட்டதைக்கண்டித்து மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கடும்அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதைக் குறிப்பிட்டு கிண்டல் செய்யும் வகையில் சிலிண்டர் மீது பிரதமர் மோடி படமும், அதன் கீழே சிலிண்டர் விலை ரூ.1,105 என்று குறிப்பிட்டு டிஆர்எஸ் கட்சியினர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.