பற்றி எரிந்த பேருந்து... தீயில் கருகிய பேருந்து பணியாளர்கள்... ராஞ்சியில் நிகழ்ந்த சோகம்!!

By Narendran SFirst Published Oct 26, 2022, 5:07 PM IST
Highlights

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கத்கர்ஹா பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதனுள் இருந்த இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கத்கர்ஹா பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதனுள் இருந்த இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கத்கர்ஹா பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதனுள் இருந்த இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். தீபாவளியையொட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கத்கர்ஹா பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்குள் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு ஓட்டுநர் மதன் மஹ்தோ மற்றும் உதவியாளர் இப்ராகிம் ஆகியோர் பூஜை செய்தனர்.

இதையும் படிங்க: உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், டிஜிபிகளுடன் பிரதமர் மோடி வரும் 28ம் தேதி கலந்தாய்வு

பின்னர் அந்த பேருந்துக்குள்ளேயே இருவரும் தூங்கியுள்ளனர். அப்போது அந்த பேருந்து திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அதில் பேருந்தில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, இந்த சம்பவம் நேற்று அதிகாலை 1 மணியளவில் நிகழ்ந்ததாகவும் தீயின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால், உள்ளே இருந்த இருவரும் தப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தீபாவளி என்பதால், டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் பஸ்ஸுக்குள் பூஜை செய்து மெழுகுவர்த்திகள் ஏற்றிவிட்டு, கதவுகளையும் ஜன்னல்களையும் பூட்டிக்கொண்டு உள்ளே தூங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: பெண் வலை! ஆபாச மிரட்டல் வீடியோ! கர்நாடக மடாதிபதி உயிரிழப்பில் மர்மம்

திடீரென்று, நள்ளிரவில் பேருந்து தீப்பிடித்து, மெழுகுவர்த்தி அல்லது மெழுகுவர்த்தியின் மூலம் தீப்பிடித்து, சில நிமிடங்களில் முழு வாகனமும் எரிந்து நாசமானது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஹேமந்த் சோரன், தனது டிவிட்டரில், ராஞ்சியில் உள்ள கத்கர்ஹா பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!