
நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி CAT Exam 2022 நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐஐஎம் பெங்களூரால் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு ( CAT ) நடத்தப்படுகிறது. இதற்கான அனுமதி சீட்டை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நாளை வெளியிடப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க:ரூ.1,40,000 சம்பளத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு.. முழு விவரம்
இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அனுமதி சீட்டு வெளியானவுடன் iimcat.ac.in. என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த தேர்விற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி முதல் செப்.14 ஆம் தேதி வரை நடைபெற்றது.
மேலும் விண்ணப்பங்களை திருத்துவதற்கான அவகாசம் செப்.26 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. இளநிலை படிப்பில் 50 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க:தெற்கு ரயில்வேயில் 1,284 காலி பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் உள்ளே