நாட்டின் வளர்ச்சிக்கு புல்லட் ரயில் திட்டம் உதவும் - பிரதமர் மோடி

Asianet News Tamil  
Published : Sep 14, 2017, 11:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
நாட்டின் வளர்ச்சிக்கு புல்லட் ரயில் திட்டம் உதவும் - பிரதமர் மோடி

சுருக்கம்

Bullet train project will help the country development

நாட்டின் முதல் புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் பிரதமர்  மற்றும் ஜப்பான் பிரதமர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

அகமதாபாத் மற்றும் மும்பை இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் - மகாராஷ்ட்ரா மட்டுமல்ல நாடே வளர்ச்சி அடைய புல்லட் ரயில் திட்டம் உதவும் என்று கூறினார்.

இந்தியாவில் விரைவாக புல்லட் ரயில் கொண்டு வர உதவிய ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவிற்கு நன்றி கூறினார். நகரங்கள் இடையேஅதி விரைவு போக்குவரத்துக்கு புல்லட் ரயில் உதவும் என்றும், மும்பை - அகமதாபாத் இடையேயான பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாடுகளுடன் வளர்ச்சியில் போட்டியிட புல்லட் ரயில் பெரிதும் உதவும் என்றும் ஏழைகளுக்கும் நவீன போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த புல்லட் ரயில் திட்டம் உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு.. ராகுல் காந்தி பேச்சு.. கொந்தளித்த அமித்ஷா, ராஜ்நாத் சிங்.. பரபரப்பு!
Union Budget 2026: திருந்தாத மத்திய அரசு..பாஜகவை விளாசிய ராகுல் காந்தி.. நிர்மலா சீதாராமன் பதிலடி!