கிராமத்தையே அழவைத்த ஒரு நாயின் மரணம்!?

Asianet News Tamil  
Published : Sep 14, 2017, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
கிராமத்தையே அழவைத்த ஒரு நாயின் மரணம்!?

சுருக்கம்

Death of a guardian Why an entire Kerala village is mourning the loss of one dog

மனிதன் பரிணாம வளர்ச்சி பெறத் தொடங்கியபோது, தனக்கு கட்டுப்பட்ட, நன்றியுள்ள ஜீவராசிகளை அருகில் வைத்துக்கொண்டான். அந்த வகையில், 15 ஆயிரம் ஆண்டுகளாக மனிதனோடு நாய்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்றால் மிகையில்லை.

மாறி வரும் நகர்ப்புற கலாச்சாரம் மட்டுமின்றி, எப்போதுமே செல்ல பிராணிகளுக்கு அன்பு காட்டும் சமூகம் இருக்கத்தான் செய்கிறது. இன்றும் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றார்கள், வளர்த்து வருகிறார்கள்.

 பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் பாராமுகம் காட்டுவதை காணமுடியும். 



அதேசமயத்தில் தனது எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் ரத்த சொந்தங்கள் போல் துடிக்கும் இந்த ஜீவனை விட வேறு உயிரினங்களை காணமுடியாது. அதனால் தான் பல வீடுகளில் பெட்ரூம் வரை முன்அனுமதி பெறாமல் வந்து செல்லும் உரிமையை பெற்ற உயிரினமாக மாறியுள்ளது.

அந்த நன்றியுள்ள ஜீவன் தனது இறப்பின் வலியை உணர்த்த ஒரு கிராமத்தையே அழவைத்து, இரங்கல் தெரிவிக்க வைத்துகிறது. அது வேறுயாருமல்ல அலி அப்பு என்ற நாய்தான்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், ஆழியூர் அருகே குஞ்சிபள்ளி என்ற சிறிய கிராமத்தில் அனைத்து மக்களாலும் ஆசையுடன் அலி அப்பு வளர்க்கப்பட்டான். 8ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்துக்கு அனாதையாக “செவலை” நிறத்தில் ஒரு நாய் அடைக்கலம் வந்தது.

அந்த நாய்க்கு கிராம மக்கள் அடைக்கலம் கொடுத்து,பசிக்கு உணவு அளிக்க ஊரோடு ஒட்டிக்கொண்டது. அந்த நாய்க்கு “அலிஅப்பு” என்று செல்லமாக பெயரிட்டு அனைவரும் அழைக்க அன்பாக பழகி வந்தது.

இரவு நேரத்தில் கிராமத்துக்குள் அலிஅப்பு நாயை மீறி ஒருவரும் வர முடியாத அளவுக்கு காவல் காத்தது. அலிஅப்பு வளர்ந்து மிரட்டலான உருவத்தை அடைந்தபின், கிராமக்க மக்கள் இரவு நேரத்தில் வீட்டின் கதவைக் கூட பூட்டாமல் தூங்கினர். அந்தஅளவுக்கு அலிஅப்பு மீது நம்பிக்கை வைத்தனர்.

இந்த சூழலில்தான் கடந்த 5ந்தேதி யாரை சில சமூகவிரோதிகள், அலிஅப்புவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு சென்றனர். காலையில் ரத்த வெள்ளத்தில், குற்றுயிராக கிடந்த அலி அப்புவை ஊர்மக்கள், அரசு கால்நடை மருத்துவமனையிலும்,தனியார் மருத்துவமனையிலும் தங்கள் செலவால் மருத்துவம் பார்த்தானர். ஆனால், விதி, அலிஅப்புவை கடந்த 8-ந்தேதி அந்தகிராம மக்களிடம் இருந்து பிரித்துக்கொண்டது.

அலிஅப்புவின் இறப்பையும், பிரிவையும் ஆழியூர் மக்களால் தாங்க முடியவில்லை. கண்ணீர் விட்டனர் சிலர், சிலர் அன்று சாப்பிடாமல் இருந்தனர், குழந்தைகள் கதறிஅழுதனர். ஆழியூர் இளைஞர்கள் ஒரு படி மேலாகச்சென்று பதாகைகள் அச்சடித்து அலிஅப்புவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். ஊர்மக்கள் கருப்பு கொடி ஏற்றி தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தினர்.

அந்த பதாகையில், “ எங்கள் கிராமத்தின் தோழன், பாதுகாவலன், அலி அப்பு சில சமூகவிரோதிகளால் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டான். கொலையாளிகளே…. நீங்கள்  இருளில் அலிஅப்புவை மட்டும் கடத்தவில்லை, கொல்லவில்லை. நீங்கள் எங்கள் அமைதியை, நிம்மதியை கொன்றுவிட்டீர்கள். இதே போன்ற தாக்குதலை, நாங்கள் பகலில் உங்கள் மீது தொடுப்போம்” என கிராம மக்கள் தங்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளா வெளிப்படுத்தி இருந்தனர்.

கிராமத்தைச்சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் அலிஅப்புவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு.. ராகுல் காந்தி பேச்சு.. கொந்தளித்த அமித்ஷா, ராஜ்நாத் சிங்.. பரபரப்பு!
Union Budget 2026: திருந்தாத மத்திய அரசு..பாஜகவை விளாசிய ராகுல் காந்தி.. நிர்மலா சீதாராமன் பதிலடி!