2023-ல் புல்லட் ரயில் ஓடத் தொடங்கும் - அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

First Published Sep 14, 2017, 11:05 AM IST
Highlights
Bullet train will begin in 2023


குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஆகியோர் இணைந்து இதற்கான அடிக்கல்லை துவக்கி வைத்தனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'நாட்டில், அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அதில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அடிக்கல்லை நாட்டினர். விழாவில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - ஜப்பான் உறவில் இன்று முக்கியமான நாள். மும்பை - அகமதாபாத் இடையே 8 மணி நேர ரயில் பயணம் இனி 2 மணி நேர பயணமாகி விடும்.

புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனம் வாங்கக்கூட வங்கிகளில் அதிக வட்டியில் கடன் பெற வேண்டியுள்ளது. ஆனால், புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் மிக குறைந்த வட்டியில் கடன் அளிக்க முன் வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 100 வருடங்களில் மாறாத தொழில வளர்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது.

புல்லட் ரயில், 2023 ஆம் ஆண்டுக்குள் தயாராகி விடும். இதற்கான வேலைகளை மிக விரைவாக செய்ய வேண்டும். 

1964 ஆம் ஆண்டில் புல்லட் ரயில் தொடங்கப்பட்ட பிறகு ஜப்பானின் வளர்ச்சி அதிவேகமாக வளர்ந்தது. 
அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு விமான பயண நேரத்தைவிட புல்லட் ரயில் பயண நேரம் குறைவு.

விமான நிலைய காத்திருப்பு, விமான பயண நேரம் ஆகியவற்றைவிட புல்லட் ரயிலின் நேரம் குறைவு.
இந்தியாவின் முதட்ல புல்லட் ரயில் 2023 ஆம் ஆண்டில் ஓடத் தொடங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
 

click me!