கோவாவில் நடைபெறும் பிரிக்‍ஸ் மாநாடு : தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் உச்சக்‍கட்ட கண்காணிப்பு

 
Published : Oct 13, 2016, 10:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
கோவாவில் நடைபெறும் பிரிக்‍ஸ் மாநாடு : தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் உச்சக்‍கட்ட கண்காணிப்பு

சுருக்கம்

 

 

கோவாவில் நடைபெறும் BRICS மாநாட்டை சீர்குலைக்‍கும் வகையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்‍கை விடுத்துள்ளது. இதனையடுத்து, முப்படைகளும் பாதுகாப்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய Surgical Strike அதிரடி தாக்குதலுக்‍கு பழிவாங்கும் விதமாக, பிரிக்ஸ் மாநாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பிரிக்‍ஸ் மாநாடு நடைபெறவுள்ள கோவாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனை நேரில் பார்வையிட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. Ajit Doval, பிரிக்‍ஸ் மாநாட்டுக்கு வருகை தரும் பல்வேறு நாட்டு விருந்தினர்கள் தங்கும் நட்சத்திர விடுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்‍கப்பகுதிகளில் எல்லைப்படை வீரர்களும், வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கோவாவை ஒட்டிய கடல் பகுதியில் கப்பல் படை மற்றும் கடலோர காவல் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விமானப்படை, மற்றும் தரைப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் தயார் நிலையில் இருந்து வருவதாகவும் திரு. Ajit Doval குறிப்பிட்டார். 

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்