
இந்திய ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இருவரை, குஜராத் மாநிலம் Kutch மாவட்டத்தில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உரி தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நுழைந்த இந்திய ராணுவத்தினர், தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் Kutch மாவட்டம், Khavda பகுதியில், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரின் நடவடிக்கைகளை உளவு பார்த்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இருவரை, அம்மாநில தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்களது பெயர் Mohammad Alana மற்றும் Safur Sumara என்பதும், உரி தாக்குதலை அடுத்து, இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய தீவிரவாதத் தடுப்புப் படையினர், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.