Chennai Coromandel Train Accident : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழப்பு; 747 பேர் காயம்!!

By Ramya sFirst Published Jun 2, 2023, 8:10 PM IST
Highlights

#Breaking News!! Chennai Coromandel Train Accident : ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Chennai Coromandel Train Accident : கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலாசோரில் சரக்கு ரயில் மீது மோதியதால் ரயில் தடம் புரண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாக பஜார் ரயில் நிலையம் அருகே,  இருந்து தடம்புரண்டு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலர் காயமடைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கும், மாநில அளவில் இருந்து கூடுதல் உதவி தேவைப்பட்டால் தகவல் தெரிவிக்கவும், பாலசோர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோரமண்டல் விரைவு ரயில், மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில் மாலை 3.30 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கி மாலை 6.30 மணிக்கு பாலசோர் நிலையத்தை வந்தடைந்தது. நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை வந்தடைவதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று 7.20 மணியளவில் இந்த ரயில் விபத்துக்குள்ளானது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு நடவடிக்கைகளில் உதவுமாறு ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கை (ODRAF) படைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

click me!