BREAKING: 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெங்களூருவில் பீதி!

By Manikanda PrabuFirst Published Dec 1, 2023, 10:58 AM IST
Highlights

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. மர்ம மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து பசவேஷ்வர் நகர் நாஃப்லே பள்ளி உட்பட பல பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

யெலஹங்காவில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக புகாரளிக்கப்பட்டதால் நிலைமை தீவிரமடைந்தது. இதன் விளைவாக, தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளை பள்ளி வளாகத்திலிருந்து அழைத்துச் செல்ல விரைந்தனர்.

Latest Videos

பெங்களூரு சதாசிவ்நகரில் உள்ள நீவ் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் வீட்டுக்கு எதிரே இந்தப் பள்ளி அமைந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

நீவ் பள்ளிக்கு காலை 6 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சதாசிவநகர் கிளைக்கு மட்டுமல்லாமல் அப்பள்ளியின் ஐந்து கிளைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நீவ் பள்ளியின் சதாசிவநகர், ஒயிட்ஃபீல்ட் மற்றும் கோரமங்கலா உள்ளிட்ட அப்பள்ளியின் கிளைகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை சதி தீவிரமானது: அமெரிக்கா!

இதுகுறித்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந் கூறுகையில், “இந்த துயரமான சம்பவங்கள் குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. உடனடியாக, புகார் தெரிவித்த அனைத்து பள்ளிகளுக்கும் நகரின் வெடிகுண்டு செயலிழப்புப் படை அனுப்பி வைக்கப்பட்டது.” என்றார்.

இதனிடையே, இந்த நெருக்கடிக்கு உடனடியாக செயலாற்றிய பசவேஷ்வநகர் போலீசார் பாதிக்கப்பட்ட பள்ளி வளாகங்களில் தீவிர சோதனை நடத்தினர். முன்னதாக, கடந்த ஆண்டில் 30 பள்ளிகளுக்கு தினமும் இதே போன்ற மின்னஞ்சல்கள் வந்த நிலையில், அதிர்ச்சியூட்டும் விதமாக பெங்களூரு நகரில் உள்ள சுமார் 15 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் நிலைமையில் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

click me!