ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை விற்பதற்கு விதிக்கப்பட்ட உத்தரவுகளை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, விற்பனைக்கும் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் ஆலை மகாராஷ்டிர மாநிலம் முலந்தில் உள்ளது. குழந்தைகளுக்கான பவுடர்களைத் தயாரித்து விற்கும் இந்நிறுவனத்துக்கு மகாராஷ்டிர அரசு தடை விதித்திருந்தது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்நிறுவனத்தின் ஆலைக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து, உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. குழந்தைகளுக்குப் பூசும் பவுடரில் அளிக்கு அதிகமாக அமிலத் தன்மை இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அந்த மாநில அரசு இந்த நடவடிக்கை எடுத்தது.
இதை எதிர்த்து அந்த நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, ஆலையில் உற்பத்தியைத் தொடரலாம்; ஆனால், விற்பனை செய்யக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமைச்சரின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி! அயோத்தி மடாதிபதி அறிவிப்பு
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பவுடரில் அமிலத்தன்மை உள்ளதாகக் கருதி தடை விதித்த அரசு 2018ல் பெறப்பட்ட மாதிரிகளை இதுவரை ஏன் பரிசோதிக்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை வரம்பை மீறி செயல்பட்டிருக்கிறது என்றும் நீதிபதிகள் கூறினர்.
கடந்த சில மாதங்களில் இந்நிறுவனத்தின் பவுடரை பரிசோதித்ததில் அவற்றில் அமிலத்தன்மை நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குதான் உள்ளது என்று தெரிய வந்திருக்கிறது என்று கூறிய நீதிபதிகள் இந்நிறுவனத்தின் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் நியாயமானவையாக இல்லை என்றும் சாடினர்.
இதனையடுத்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்வதாகவும் இந்நிறுவனத்தின் பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்வும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என்றும் கூறினர். மேலும், புதிய மாதிரகளை சேகரித்து இரண்டு அரசு மற்றும் ஒரு தனியார் பரிசோதனை மையங்களில் சோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Cabinet Reshuffle: மத்திய அமைச்சரவை மாற்றத்தில் 12 பேரின் பதவிக்கு வேட்டு வைக்க வாய்ப்பு