பலாத்காரம் செய்த பெண்ணை ஓர் ஆண்டுக்குள் கண்டுபிடித்தால் அந்தப் பெண்ணையே திருமணம் செய்யலாம் என்று பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பலாத்காரம் செய்த பெண்ணை ஓர் ஆண்டுக்குள் கண்டுபிடித்தால் அந்தப் பெண்ணையே திருமணம் செய்யலாம் என்று பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த இளைஞரால் பலாத்காரத்துக்கு ஆளாகிய இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டார். அவரை கண்டுபிடிக்க பல்வேறுமுயற்சிகள் நடக்கும் நிலையில் இந்த உத்தரவை இளைஞருக்கு நீதிமன்றம் வழங்கியது.
பிஎம் கிசான் 12 வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி: விவசாயிகளுக்கு ரூ.16ஆயிரம் கோடி உதவி
மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒருஅமர்வு நீதிபதி பாரதி டாங்கிரி கடந்த 12ம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்து ஜாமீன் வழங்கியுள்ளார்.
26 வயது இளைஞர், 22 வயது பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டிலிருந்தே தொடர்பு இருந்துள்ளது. இருவருக்கும் பழக்கம் இருப்பது இருவீட்டாருக்கும் தெரியும். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அந்த இளம் பெண் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தால், இந்தத் தகவலை காதலனிடம் தெரிவித்தார். அதன்பின் இளம் பெண்ணுடன் பழகுவதை இளைஞர் குறைத்துக்கொண்டு, சந்திப்பதையும் தவிர்த்தார்.
ஒரு தேசம் ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி உதவிதொகை
இதையடுத்து, தான் கர்ப்பமாகஇருப்பதை தனது குடும்பத்தாருக்கு தெரிவிக்க மறுத்த இளம் பெண், வீட்டைவிட்டு வெளியேறினார். கடந்த 2020, ஜனவரி 27ம் தேதி குழந்தையையும் இளம் பெண் மும்பை மருத்துவமனையில் பெற்றெடுத்தார்.
அதன்பின் ஜனவரி 30ம் தேதி ஒரு கட்டிடத்தின் முன் தான் பெற்ற பச்சிளங்குழந்தையை தவிக்கவிட்டு அந்த இளம் பெண் மாயமானார். இதற்கிடையே 2020, பிப்ரவரி மாதம் இந்த பெண் மும்பை போலீஸாரிடம் தனது காதலன் குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாருக்குப்பின் அந்த பெண் எங்கிருக்கிறார் என்ற விவரம் ஏதும் தெரிவிக்கவில்லை, புகாருக்கு உள்ளாகிய இந்த 26 வயது இளைஞரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி, அந்த இளைஞர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதி டாங்கிரி கடந்த 12ம் தேதி விசாரித்தார் அப்போது அவர் கூறுகையில் “ 22 வயது பெண்ணுடன் 26 வயது இளைஞருக்கு உறவு இருந்துள்ளது. ஆனால் கர்ப்பமாக இருப்பது தெரிந்தவின் அந்த பெண்ணை இளைஞர் புறக்கணித்தார் இதற்காக அவர் மீது மோசடி மற்றும் பலாத்காரவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: சோனியா, பிரியங்கா வாக்களிப்பு
அந்த பெண் நீதியின் பரிபாலனத்தில் இருந்து விலகிச் செல்ல ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அந்த பெண்ணை திருமணம் செய்யவும், குழந்தையை ஏற்றுக்கொள்ளவும் இளைஞர் உறுதியளித்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீஸாரும் தேடி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை விடுவிப்பது சிறந்தது என நினைக்கிறேன். இளைஞர் அடுத்த ஓர் ஆண்டுக்குள் இந்த பெண்ணை கண்டுபிடித்துவிட்டால் அவரையே திருமணம் செய்யலாம். ஆனால், இந்த உத்தரவு ஓர் ஆண்டு மட்டுமே செல்லுபடியாகும். ரூ.25 ஆயிரம் பிணையில் ஜாமீன் வழங்க உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்