விவசாயிகளுக்கான பிஎம்-கிசான் நிதிஉதவித் திட்டத்தின் கீழ் 12வது தவணையாக ரூ.16ஆயிரம் கோடியை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.
விவசாயிகளுக்கான பிஎம்-கிசான் நிதிஉதவித் திட்டத்தின் கீழ் 12வது தவணையாக ரூ.16ஆயிரம் கோடியை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.
இதன் மூலம் தகுதிவாய்ந்த 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.2ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். இதுவரை பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் ரூ.2.16 லட்சம் கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தேசம் ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி உதவிதொகை
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகையை 3 தவணைகளாக 4 மாத இடைவெளியில் பெறுவார்கள். 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் 2019ம் ஆண்டு பிப்ரவரியில்தான் முறைப்படி அறிமுகமானது.
டெல்லியில்உள்ள புஷா வளாகத்தில் இன்று தொடங்கிய “பிஎம் கிசான் சம்மான் சம்மேளன்-2022” மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இந்த விவசாயிகளுக்கான 12வது தவணை நிதியுதவியை பிரதமர் மோடி விடுவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: சோனியா, பிரியங்கா வாக்களிப்பு
நாடுமுழுவதும் 13,500 விவசாயிகள், 1,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.
விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டை, கிசான் கணக்குடன் இணைத்திருக்கும் பட்சத்தில் அவர்களின் வங்கிக்கணக்கிறக்கு நேரடியாக உதவித்தொகை பரிமாற்றம் செய்யப்படும். பணம் முறைப்படி வந்து சேரவில்லை என்று பல புகார்களை விவசாயிகள் தெரிவிக்கிறார்கள் ஆனால், விவசாயிகள் தங்களின் கேஒய்சி விதிகள்படி விவரங்களை புதுப்பித்திருத்தல் அவசியமாகும்.