நாடு முழுவதும் ஒரே தேசம், ஒரே உரம்(பிரதம மந்திரி பாரதிய ஜன் உர்வாரக் பரியோஜனா) திட்டத்தை பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கான 12வது உதவித் தொகையான ரூ.16 ஆயிரம் கோடியும் விடுவித்து அறிவித்தார்.
நாடு முழுவதும் ஒரே தேசம், ஒரே உரம்(பிரதம மந்திரி பாரதிய ஜன் உர்வாரக் பரியோஜனா) திட்டத்தை பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கான 12வது உதவித் தொகையான ரூ.16 ஆயிரம் கோடியும் விடுவித்து அறிவித்தார்.
நாடு முழவதும் உரங்களுக்கான பிராண்டுகளில் ஒரேமாதிரித் தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் அனைத்து நிறுவனங்களும் தங்களின் வேளாண் இடு பொருட்களை “பாரத்” என்ற ஒற்றைப் பெயரில் வெளியிடப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: சோனியா, பிரியங்கா வாக்களிப்பு
அனைத்து உரப் பைகளிலிலும் அது டிஏபி(DAP) அல்லது எம்ஓபி அல்லது என்பிகே எந்த உரமாக இருந்தாலும், பாரத்யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி , பாரத் என்பிகே என்று குறிப்பிட வேண்டும். தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் பாரத் என்ற பெயரில் கொண்டு வர வேண்டும்.
அதாவது உரப் பைகளி்ல் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் உரம் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், லோகோ, பிராண்ட் ஆகியவற்றை வைத்துக்கொள்ளலாம். மீதமுள்ள 2 பங்கு இடத்திலும் மத்திய அரசின் பாரத் மற்றும் பிரதான் மந்திரி பாரதிய ஜன் உர்வாரக் பரியோஜனா என்ற பெயர் இடம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் என்ற பெயரும், பிரதான் மந்திரி பாரதிய ஜனுவராக் பாரியோஜனா(பிஎம்பிஜேபி) என்றதிட்டத்தின் அடையாளமும், எந்த மானியத்தின் கீழ் உரம் வழங்கப்படுகிறது என்ற பெயரும் உரத்தின் பையில் இடம் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ரோஜா காரை சூழ்ந்து நின்று கல்லால் கொலை வெறி தாக்குதல்.. ஜனசேனா கட்சியினர் 25 பேர் கைது .
டெல்லியில் பிரதமர் கிசா் சம்மன் சம்மேளன் மாநாடு இரு நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று பங்கேற்று “ஒரே தேசம், ஒரே உரம்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அது மட்டும்லலாமல் விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை திட்டத்தையும் மோடி விடுவித்தார். 12வது நிதிஉதவி தவணையின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.16ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.
அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது “ ஒரே தேசம், ஒரே உரம் திட்டத்தின் மூலம் விவசாயிகள் குறைவான விலையில் தரமான உரங்களைப் பெற முடியும்.
சீனாவுக்கு பரிசு!தேசத்திடம் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்!சுப்பிரமணியன் சுவாமி விளாசல்
உரத்தின் தரத்திலும், உற்பத்தி தொழில்நுட்பத்திலும் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. இந்த முயற்சி, வேளாண் பொருட்கள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும், அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும். உலகளவில் வேளாண் பொருட்களின் திறமையான உற்பத்திக்கு சிறந்த முனையமாகஇந்தியா விரைவில் மாறும்.
விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்துக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கவேண்டும். தண்ணீரை சுழன்று பாய்ச்சும் ஸ்பிரிங்லர் முறையைப் பயன்படுத்த வேண்டும், மண்ணின் வளத்தைப்பாதுகாக்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்தால், அதன் மூலம் அதிகமான அவு உற்பத்தி கிடைக்கும்.
சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய், உரம் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்கவே அதிகமாகச் செலவிடுகிறோம். வெளிநாடுகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால்கூட இது நம்மையும் பாதிக்கும். முதலில் கோவிட் பிரச்சினை, 2வது ரஷ்யா உக்ரைன் போர் பாதித்தது. நம்முடைய தேவையை பெரும்பகுதி நிறைவேற்றிய நாடுகள் போரில் சிக்கிகக்கொண்டன ” எனத் தெரிவித்தார்