
பேஸ்புக்கில் லைவ் வீடியோ பதிவு செய்து கொண்டே பிஎம்டபிள்யூ காரில் 230 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ - காசிபூர் மாவட்டத்தை இணைக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த 15-ம் தேதி லாரி மீது கார் மோதி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிஎம்டபிள்யூ காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக காரில் பயணித்த 4 பேரும் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- Congress Presiden Election: காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: சோனியா, பிரியங்கா வாக்களிப்பு
அந்த வீடியோவில் காரில் டெல்லி நோக்கி 4 பேர் பயணித்துள்ளனர். அந்த காரை பீகாரில் உள்ள தனியார் மருத்துக்கல்லூரி பேராசிரியராக உள்ள ஆனந்த் பிரகாஷ்(35) ஓட்டியுள்ளார். இவருடன் பொறியாளர் தீபக் குமார், அகிலேஷ், முகேஷ். இதில், காரில் இருந்த ஒருவர் தங்களது கார் 230 கிலோ மீட்டர் வேகதத்தில் சென்று கொண்டிருப்பதாகவும் அடுத்து 300 கிலோ மீட்டர் வேகத்தை தொடப்போவதாகவும் ஒருவர் லைவ்வில் சொல்ல மற்றொருவர் நாங்கள் நால்வரும் சாகத்தான் போகிறோம் என்று கூறிய சில நிமிடங்களில் பேஸ்புக் நேரலையை திடீரென நிறுத்தப்பட்டது. அதன் பின் சிறிது நேரத்தில் சாலையில் எதிரே வந்த லாரி மீது கார் அதிக வேகமாக மோதி லாரி அடியில் அப்பளம் போல் புகுந்தது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி மற்றும் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- பள்ளி வேனுக்குள் 11 அடி ராட்சத மலைப்பாம்பு.. அலறிய பொதுமக்கள்! பயந்த வனத்துறை