"ஒழிந்ததா கருப்பு பணம்...?" - அள்ள அள்ள சிக்குது புதிய நோட்டுகள்

 
Published : Dec 11, 2016, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
"ஒழிந்ததா கருப்பு பணம்...?" - அள்ள அள்ள சிக்குது புதிய நோட்டுகள்

சுருக்கம்

நாடுமுழுவதும் வருமானவரித்துறையினர் நேற்று ஒரு நாள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 31 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன. 

இதில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஹவாலா தரகர் ஒருவர் வீட்டின் குளியல் அறையில் சுவற்றில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 5.7 கோடி புதிய ரூபாய் நோட்டுகள். 

சென்னையில் தொழில்அதிபர் சேகர் ரெட்டியின் காரில் இருந்து ரூ. 24 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள். 

ஐதராபாத்தில் உள்ள தபால்நிலைய கண்காணிப்பாளரிடமிருந்து ரூ. 75 லட்சத்துக்கான புதிய ரூபாய் நோட்டுகள். மேலும், ஐதராபாத்தில் இரு வேறு  இடங்களில் கைப்பற்றப்பட்ட ரூ. 75 லட்சம், மற்றும் ரூ.85லட்சத்துக்கு புதிய 2 ஆயிரம் நோட்டுகள் என ஒரே நாளில் ரூ.31 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. 

கர்நாடக மாநிலம், சித்ர துர்கா மாவட்டத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் சல்லாகரே நகர் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு ஹவாலா தரகர் ஒருவர் வீட்டில் ஏராளமான கணக்கில் வராதா பணம், தங்கம் குளியல் அறையில் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக, வருமான வரித்துறையின் நுன்னறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வருமான வரித்துறையினர் நேற்று அந்த வீட்டில் சோதனையிட்டனர். அப்போது குளியல் அறையில் உள்ள சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் கற்களுக்கு பின்புறம், ரூ. 5.7 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளும், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வாஸ்பேசின் தொட்டிக்கு அடியில் 28 கிலோ தங்க பிஸ்கட்கள், 4 கிலோ நகைகள் பதுக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

மிகவும் நூதனமான முறையில், சுவற்றை துளையிட்டு, அதில் இந்த பணத்தை பதுக்கி, டைல்ஸ் கற்கள் கொண்டு மூடப்பட்டு இருந்தது. மேலும், ரூ. 90 லட்சத்துக்கு ரூ.100 மற்றும் ரூ.20 நோட்டுகளையும், ஏராளமான ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஐதராபாத்தில் உள்ள தபால்நிலைய மேலாளர் சுதிர் பாபுவிடம் இருந்து ரூ.65 லட்சம் புதிய 2 ஆயிரம் நோட்டுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். பழைய ரூபாய்களை கமிஷன் அடிப்படையில் மாற்றிக்கொடுக்கிறார் என்று வந்த புகாரைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த பணம் சிக்கியது. ரூ.3.75 கோடி பழைய ரூபாயை ரூ.65 லட்சம் கமிஷன் அடிப்படையில் மாற்றிக்கொடுத்துள்ளார். மேலும், ரூ.92.68 லட்சத்துக்கான புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளையும் பறிமுதல் செய்தோம் என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தவிர்த்து சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான பலஇடங்களில் ரூ.142 கோடியும், 127 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. அதில் நேற்று மட்டும் அவரின் காரில் இருந்து  ரூ.24 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!