
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் கையில் வைத்திருக்கும் பணத்தை மாற்ற வங்கிகளில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளில் பணத்தை மாற்ற வருபவர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்த பின்னரே பணத்தை மாற்றி கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி வருமானத்திற்கு அதிகமாக பணம் டெபாசிட் செய்தால் 2௦௦ அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக சிக்கும் நிலை உள்ளது.
இந்நில்லையில், உத்திரபிரதேசம் மாநிலம் பெரேலியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மூட்டை, மூட்டையாக எரிக்கப்பட்டுள்ளது.
எரிக்கப்பட்ட பணம் அனைத்தும் கருப்பு பணமாக இருக்கும் என கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததையடுத்து குவியல் குவியலாக பணம் எரிக்கப்பட்டுள்ளதை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.