“பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான வழக்கு” – வரும் 15ம் தேதி விசாரணை

First Published Nov 11, 2016, 3:47 AM IST
Highlights


கருப்பு பணம் மற்றும் கள்ளப்பனத்தை ஒழிக்க கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கையில் வைத்திருக்கும் பழைய நோட்டுக்களை மாற்றி கொள்ள டிசம்பர் 30–ந் தேதி வரை கால அவகாசம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை வங்கிகளில் மாற்றிகொள்ளலாம்.

இதனிடையே, மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சங்கம்லால் பாண்டே, விவேக் நாராயண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், எனவே மத்திய அரசின் இந்த அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு வரும் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த கேவியட் மனுவில், இந்த விவகாரத்தில் மத்திய அரசை  கருத்தை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

click me!