
நாட்டில் வாழும் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் இந்தியர்கள் அல்ல என்று கடந்த 2010ம் ஆண்டு கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர்தான் ராம்நாத்கோவிந்த். ஆனால், அவரை இப்போது ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜனதா கட்சி முன்னிறுத்தியுள்ளது.
ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை
சிறுபான்மையினகளுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கடந்த 2010ம் ஆண்டு அறிக்கை அளித்து இருந்தது. அதில் மதம், மொழி சிறுபான்மையினரில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடும், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடும் அளிக்க வேண்டும். அனைத்து மதங்களில் இருக்கும் தலித் பிரிவினருக்கும் எஸ்.சி. அந்தஸ்து கொடுக்க வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தது.
செய்தித்தொடர்பாளர்
அது குறித்து அப்போது பா.ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தராம்நாத் கோவிந்த் சர்ச்சைக்குரிய வகையில் 2010-ம் ஆண்டு மார்ச் 26-ந்தேதி கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்தியர்களே இல்லை
அவர் கூறுகையில், “ ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைகளை ஏற்க முடியாது. அது நடைமுறைக்கு வராது. முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் எஸ்.சி. பிரிவில் சேர்ப்பது என்பது அரசியலமைப்புசட்டத்துக்கு விரோதமானது. கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் இந்தியர்களே கிடையாது.
ரத்து செய்ய வேண்டும்
எஸ்.சி. பிரிவில் உள்ள குழந்தைகளின் கல்வித்தரம் என்பது, கிறிஸ்துவம் மற்றும் முஸ்லிம் மதத்துக்கு மதம்மாறும் தலித்பிரிவினரைக் காட்டிலும் கல்வித்தரம் மோசமாக இருக்கிறது. மதமாற்றும் ஆகும் குழந்தைகள் வளர்ந்து அரசு வேலைவாய்ப்பில் அதிகமான இட ஒதுக்கீட்டை பிடித்துக்கொள்கிறார்கள். ஆதலால், ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கை என்பது எஸ்.சி. பிரிவினருக்கு எதிரானது, இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
அப்போது முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் எதிராக ரங்கநாத் கோவிந்த் பேசியது ஊடங்களிலும், இணையதத்திலும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, விவாதத்துக்கு உள்ளானது. அப்போது கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி கருத்து தெரிவித்த ரங்கநாத், இப்போது பா.ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.