இந்தியாவையும் தாண்டி உலக அளவில் யோகா புகழ் பெற்றிருக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்!!

 
Published : Jun 21, 2017, 07:18 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
இந்தியாவையும் தாண்டி உலக அளவில் யோகா புகழ் பெற்றிருக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்!!

சுருக்கம்

International yoga day... Pm modi in lucknow

சர்வதேச யோகா தினத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வரும், யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வருகிறார். 55 பேர் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜுன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 ஆம் தேதி யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் சர்வதேச யோகா தினம், இன்று நாடு முழுவதும் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தற்போது யோகா நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

லக்னோ ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த யோகா நிகழ்ச்சியில், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கு வெளியேயும் யோகாவின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். யோகாவிற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு  கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் யோகா மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி யோகா ஆசிரியர்களின் தேவியும் அதிகரித்துள்ளதாக கூறினார். யோகா தினத்தையொட்டி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்