தனியாக ஆட்சியை பிடித்துவிடலாம் எண்ணிய மோடி-அமித் ஷாவுக்கு ஏமாற்றம்..!

By karthikeyan VFirst Published Oct 24, 2019, 10:11 AM IST
Highlights

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. 
 

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாஜக தனது ஆஸ்தான கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை எதிர்கொண்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா மற்றும் சில சிறிய கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. 

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 152 தொகுதிகளிலும் சிவசேனா 124 தொகுதிகளிலும் மற்ற சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பாஜகவின் ஆதிக்கம் தொடர்கிறது. 

பாஜக தலைமையிலான கூட்டணி மொத்தமாக 175க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க, 145 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். பாஜக போட்டியிட்ட 152 தொகுதிகளில் 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சிவசேனா 66 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

பாஜகவின் முன்னிலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 தொகுதிகளே தேவை என்ற நிலையில், அந்த பெரும்பான்மையை பாஜக மட்டுமே பெற்றுவிட வாய்ப்புள்ளது. கூட்டணி கட்சிகள் பெறும் தொகுதிகள், ஒரு சப்போர்ட்டுக்குத்தான். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெறும் 77 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதில் காங்கிரஸ் வெறும் 37 தொகுதிகளில் தான் முன்னிலை வகிக்கிறது. 

கூட்டணி கட்சியின் வெற்றிகளை சேர்க்காமலேயே பாஜக, தனிப்பெரும்பான்மையை பெறும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்துவது, பாஜகவின் பலத்தையும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கெத்தையும் காட்டும் விதமாக அமைந்துள்ளது. மோடி - அமித் ஷா என்ற வலுவான ஜோடிக்கும் பாஜகவிற்கு கிடைத்துள்ள, அடுத்த மிகப்பெரிய வெற்றி இது. மக்களவை தேர்தல் அபார வெற்றிக்கு பிறகு, மற்றுமொரு அபாரமான வெற்றியை பெற்றுள்ளது பாஜக. 

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்துவிட்டால், உங்க கூட்டணி எங்களுக்கு தேவையில்லை என்று சிவசேனாவை கழட்டிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


 

click me!