அப்பா…. ஒரு வழியா பிஎஸ்என்எல்லுக்கு 4 ஜி அனுமதி கொடுத்த மத்திய அரசு !!

By Selvanayagam PFirst Published Oct 23, 2019, 9:16 PM IST
Highlights

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு பொதுத்துறை நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ஆகியவை ஒன்றாக இணைக்கப்படும் என மத்திய அமைச்சரவை இன்று (அக்டோபர் 23) அறிவித்திருக்கிறது.

மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும், 4ஜி உள்ளிட்ட சேவைகளையும் காலத்திற்கேற்ற வகையில் கொடுத்து வருகின்றன. 

பெரும் வருமானத்தை ஈட்டக்கூடிய தொலைதொடர்பு சந்தையில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மட்டும் 4ஜி சேவைக்கான அனுமதி கிடைக்காமல் இருந்தது. ஏற்கனவே பண நெருக்கடியில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் இதனால் மற்ற நிறுவனங்களோடு போட்டி போட முடியாமல், மேலும் பின்னடைவைச் சந்தித்தது.

டெல்லியில் நேற்று(அக்டோபர் 22) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று(அக்டோபர் 23)செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 பிஎஸ்என்எல் மார்ச் 2020 இறுதிக்குள் 4 ஜி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மூடப்போவதாக வரும் செய்திகளில் உண்மை கிடையாது என தெரிவித்தார்.

மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத்தலங்கள், குடிசை பகுதிகள், ஆகிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் முன் பாத்திரங்களில் தண்ணீர் மற்றும் மணல் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது

click me!