இதை செஞ்சா திருப்பதி விஐபி தரிசனம் க்கரண்ட்டி..! தேவஸ்தானம் அதிரடி முடிவு..!

By Manikandan S R SFirst Published Oct 23, 2019, 4:47 PM IST
Highlights

திருப்பதியில் இருக்கும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி தரிசனத்திற்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். உலகின் பணக்கார கடவுளாக அறியப்படும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என்று உண்டியலில் செலுத்துகின்றனர்.

இந்தநிலையில் திருப்பதியில் நடைமுறையில் இருந்த விஐபி தரிசன முறை அண்மையில் ரத்து செய்யப்பட்டது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தேவஸ்தான உயரதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அரசின் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் அனுமதி கடிதங்களுடன் 500 ரூபாய் டிக்கெட் கட்டணத்துடன் விஐபி தரிசன முறை அமலில் இருந்தது. இந்த தரிசனத்திற்காக டிக்கெட்டை இடைத்தரகர்கள் அதிகமான விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து தான் தேவஸ்தானம் விஐபி தரிசன முறையை ரத்து செய்தது.

இதையும் படிங்க: காதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை..! மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..!

இதனிடையே தேவஸ்தானத்திற்கு 10 ஆயிரம் நன்கொடை அளித்தால் விஐபி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. திருப்பதி ஆலயத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக 10 ஆயிரம் நன்கொடை அளித்தால் 500 ரூபாய் கட்டணத்துடன் விஐபி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: உருவாகிறது 'புதிய திருப்பதி'.. ஆந்திராவிற்கு போட்டியாக பிரம்மாண்ட ஏற்பாடு!!

click me!