Latest Videos

LK Advani: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி டெல்லி எய்ஸ்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

By SG BalanFirst Published Jun 26, 2024, 11:43 PM IST
Highlights

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

96 வயதான எல்.கே.அத்வானி தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் முதியோர் நலப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்காக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை மதிப்பீடு செய்து தேவையான சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்வானியின் உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாக்ஸ்கான் சென்னை அலுவலகத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை கிடையாதா?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மத்திய அரசு அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. அவரது இல்லத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு விருதை வழங்கினார். அத்வானியின் உடல்நலக் குறைவு காரணமாக இந்த நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. பிரதமர், துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு உள்ளிட்டோரும் அப்போது உடன் இருந்தனர்.

எல்.கே. அத்வானி நவம்பர் 8, 1927 இல் பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தார். 1980ஆம் ஆண்டு தொடங்கி பாஜகவுக்கு நீண்டகாலம் தலைவராகப் பணியாற்றினார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். 1999 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில்1999 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியல் ரீ-என்ட்ரி...? பவன் கல்யானின் ஜனசேனாவில் முக்கிய பதவிக்கு ரெடியா?

click me!