Rahul Gandhi Yatra: RSS:ஆர்எஸ்எஸ் பயிற்சியில் ராகுல் காந்தி பங்கேற்க வேண்டும்: பாஜக அழைப்பு

By Pothy RajFirst Published Jan 11, 2023, 11:59 AM IST
Highlights

ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றி ஏதும் தெரியாமல் விமர்சித்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் அம சஹா பயிற்சியில் சில நாட்கள் பங்கேற்க வேண்டும் என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றி ஏதும் தெரியாமல் விமர்சித்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் அம சஹா பயிற்சியில் சில நாட்கள் பங்கேற்க வேண்டும் என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று வரும் ராகுல் காந்தி நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசுகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பை 21ம் நூற்றாண்டின் கெளரவர்கள் என்று ராகுல்காந்தி கடுமையாகச் சாடினார். 

தமிழ்நாட்டில் மோதல்! மேற்குவங்கத்தில் பாசம்! அடுத்த தலைமை செயலாளர் யார்? அரசியல் கிசுகிசு

இதற்கு பதிலடியாக ஹரியானாஉள்துறை அமைச்சர் அனில் விஜ் பேசியுள்ளார். அவர் கூறுகையில் “ ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றி ராகுல் காந்தி அறியாமல் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றி அறியாத ராகுல் காந்தி, அந்த அமைப்பின் சஹா பயிற்சியில் சிலநாட்கள் பங்கேற்க வேண்டும்.

ஏழைகளுக்கு ஏற்றார்போல் பேசும் ராகுல் காந்தி, இரவில் சொகுசு அறையில் தூங்குகிறார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி ஒன்றும் தெரியாத ராகுல் காந்தி, அந்த அமைப்பைப் பற்றி கருத்துக் கூற உரிமையில்லை. இன்று இந்த தேசம் நிமிர்ந்து நிற்க ஆர்எஸ்எஸ்தான் காரணம். 

பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு:மாணவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதி

ஏழைச் சிறுமிகள் கிழிந்த ஆடைகளைப் பார்த்துதான் பாரத் ஜோடோ யாத்திரையில் டி-ஷர்ட் அணிவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நான் கேட்கிறேன், குறைந்தபட்சம் அந்தச் சிறுமிகள் வசிக்கும் வீ்டுக்கு ராகுல் காந்தி சென்று, அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், எங்கே தூங்குகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். 
ராகுல் காந்தி ஏழைகளைப் பற்றி பேசினாலும் அனைத்து வசதிகளும் அடங்கிய சொகுசு வேனில்தான் தூங்குகிறார். ராகுல் காந்தி பயணத்துக்கு கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது, அதற்கான எந்தக் கணக்கும் இல்லை.

இவ்வாறு அனில் விஜ் தெரிவித்தார்

51 நாட்கள் நதியில் பயணிக்கும் சொகுசு கப்பல்: 13ம்தேதி பிரதமர் மோடி தொடக்கம்

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் நிருபர்களிடம் கூறுகையில்  “ ஒருவர் தான் பின்பற்றும் சித்தாந்தங்களைப் பற்றி அறியாமலே அதைப் பற்றி பேசுகிறார்.  சில நேரம் சிவ பக்தர்போல் ராகுல் காந்தி பேசுகிறார், சில நேரங்களில் அர்ச்சகர்களை விமர்சிக்கிறார். அவர் பயணிக்கும் திசை என்ன என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியாது. ராகுல் காந்தி பேச்சு குறித்து காங்கிரஸ் தலைவர்களே குழம்பிப்போய்உள்ளனர். எப்படியாகினும் ராகுல் காந்தி பப்புதான்” எனத் தெரிவித்தார்

click me!