வெளியானது சிஏ இடைநிலை இறுதித் தேர்வு முடிவுகள்... பார்ப்பது எப்படி? விவரம் உள்ளே!!

By Narendran SFirst Published Jan 10, 2023, 8:18 PM IST
Highlights

ஆடிட்டர் படிப்புக்கான சிஏ இடைநிலை, இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளதை அடுத்து அதை எப்படி பார்ப்பது என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

ஆடிட்டர் படிப்புக்கான சிஏ இடைநிலை, இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளதை அடுத்து அதை எப்படி பார்ப்பது என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. இந்தியாவில் கணக்காளராக விரும்புவோர் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். இந்த தேர்வு முதல்நிலை, இடைநிலை, இறுதித் தேர்வு என்று மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாத அமர்வுக்கான இடைநிலைத் தேர்வு நவ. 2 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல இறுதித் தேர்வு நவ. 1 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜன.10) வெளியாகி உள்ளன. 

இதையும் படிங்க: வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!

அதன்படி, 1,00,265 தேர்வர்கள் எழுதிய சிஏ இடைநிலை குரூப் 1 தேர்வில் 21,244 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் 79,292 தேர்வர்கள் எழுதிய சிஏ இடைநிலை குரூப் 2 தேர்வில் 19,380 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு தேர்வுகளையும் எழுதிய 37, 428 பேரில் 4,759 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிஏ இறுதி குரூப் 1 தேர்வை மொத்தம் 65,291 தேர்வர்கள் எழுதிய நிலையில் 13,969 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிஏ இறுதி குரூப் 2 தேர்வை எழுதிய 64,775 தேர்வர்களில் 12,053 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: தமிழகத்தைப் போல பீகாரில் ஆளுநர் செய்த சம்பவம்! நடந்தது என்ன?

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி? 

  • இந்திய பட்டயக் கணக்காளர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ icai.nic.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
  • முகப்புப் பக்கத்தில் CA result 2022 என்ற இணைய முகவையை க்ளிக் செய்யவும்.
  • பதிவு எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை உள்ளிட்டு, சப்மிட் கொடுக்கவும்.
  • அதில் வெளியாகும் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். 
  • சிஏ தேர்வு முடிவுகளுக்கான மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
click me!